விடிய விடிய அழுதிருக்கிறேன்! – எதிர்நீச்சல் நந்தினியின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனையே எதிர்த்துப் பேசும் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்றவர் ஹரிப்ரியா. கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் விக்னேஷ் குமாரைக் காதலித்துத் திருமணம் செய்த இவர், பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழ்கிறார்.
தற்போது தனது மகனைத் தனியாக வளர்த்து வரும் ஹரிப்ரியா, ஒரு சிங்கிள் மதராகத் தான் எதிர்கொள்ளும் வலிகள் குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.
“ஒரு காலத்தில் தனியாக அறைக்குள் அமர்ந்து விடிய விடிய அழுதிருக்கிறேன்” என அவர் கூறியுள்ளது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
“குழந்தை ஏதேனும் தவறு செய்தால், உடனே சமூகம் தாயைக் கைக்காட்டும்; அந்த அழுத்தம் எப்போதும் மனதிற்குள் இருக்கும்” என ஹரிப்ரியா வேதனை தெரிவித்துள்ளார்.
அழுவது பலவீனம் அல்ல, அது நம்மை உள்ளிருந்து பலமாக்கும் ஒரு வழி என்று கூறியுள்ள அவர், தனிமையை ஏற்றுக்கொண்டு வாழக் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
உடைந்து போகும் நேரங்களில் இருந்து மீண்டு வரும்போதுதான் உண்மையான வலிமை கிடைக்கும் என அவர் பேசியுள்ள கருத்துக்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் பல பெண்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.





