அர்ச்சுனா எம்பிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு! துப்பாக்கி மிரட்டல் விவகாரத்தில் பிணை அனுமதி
யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், இன்று (29) மல்லகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதவான், அவரைப் பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக இச்சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய நீதிமன்ற உத்தரவு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





