மீண்டும் எகிறியது பெட்ரோல், டீசல் விலை! – இன்று நள்ளிரவு முதல் அதிரடி விலை உயர்வு!
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளையும் உயர்த்தியுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 410 ரூபாயாகவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 470 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டீசல் விலையைப் பொறுத்தவரை, ஒட்டோ டீசல் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 392 ரூபாய்க்கும், சுப்பர் டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 458 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
வாகன எரிபொருட்களுக்கு இணையாக மண்ணெண்ணெய் விலையும் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் புதிய விலை 265 ரூபாயாக அமையும்.





