Welcome to Jettamil

இலங்கையில் அதிரடியாக உயரப் போகும் வாகனங்களின் விலைகள்! நுகர்வோருக்குப் பேரிடி

Share

இலங்கையில் அதிரடியாக உயரப் போகும் வாகனங்களின் விலைகள்! நுகர்வோருக்குப் பேரிடி

இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத், அமெரிக்க டொலர் மற்றும் பிற அந்நியச் செலாவணிகளின் மதிப்பு உயர்வால் வாகன இறக்குமதிச் செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதன் நேரடித் தாக்கமாக சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் விரும்பும் சுஸுகி வேகன்ஆர் (Wagon R) காரின் விலை சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாயால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகரிப்பு மற்றும் செலாவணி மாற்றங்களால், ஹோண்டா சிவிக் (Honda Civic) காரின் விலை 3 இலட்சம் ரூபாயாலும், டொயோட்டா டகோமா (Toyota Tacoma) காரின் விலை இரண்டரை இலட்சம் ரூபாயாலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், அண்மையில் அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை உயர்வு காரணமாக, சந்தையில் புதிய வாகனங்களுக்கான தேவை (Demand) தற்போது மந்தகதியிலேயே காணப்படுவதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை