Welcome to Jettamil

தமிழகத்தில் மும்முனைப் போட்டியால் அதிரும் அரசியல் களம்! விஜய் தலைமையிலான தவெக ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

Share

தமிழகத்தில் மும்முனைப் போட்டியால் அதிரும் அரசியல் களம்! விஜய் தலைமையிலான தவெக ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என முதல் முறையாகக் களம் ஒரு மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.

பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனக் கூறினாலும், காமாக்யா அனலிட்டிக்ஸ் (Kamakhya Analytics) வெளியிட்டுள்ள கணிப்புகள் தமிழக அரசியலை உலுக்கியுள்ளன.

அந்தக் கணிப்பின்படி, எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் கிடைக்காமல் ‘தொங்கு சட்டசபை’ (Hung Assembly) உருவாகும் சூழல் நிலவுகிறது.

குறிப்பாக, தவெக 67 முதல் 81 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைப்பதில் ஒரு முக்கிய ‘எக்ஸ்-ஃபேக்டராக’ (X-Factor) உருவெடுத்துள்ளது.

ஒருவேளை எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை எனில், தமிழகத்தில் முதல் முறையாகக் கூட்டணி ஆட்சி அல்லது வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் நிலை உருவாகலாம்.

தி.மு.கவை வீழ்த்த அதிமுக மற்றும் தவெக கைகோர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை