Welcome to Jettamil

முதலமைச்சர் விஜய் எங்களோடு பேச வேண்டும்! – இலங்கை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பகிரங்க அழைப்பு!

Share

முதலமைச்சர் விஜய் எங்களோடு பேச வேண்டும்! – இலங்கை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பகிரங்க அழைப்பு!

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள விஜய்க்குத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தமிழக மக்கள் ஊழல், மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்த்தே விஜய்க்கு வாக்களித்துள்ளதாகவும், அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கை குறித்து விளக்கமளித்தார்.

தடைசெய்யப்பட்ட இழுவைமடிப் படகுகளைப் பயன்படுத்துவது இலங்கையின் வாழ்வாதாரத்தையும் இறையாண்மையையும் பாதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரடியாக இலங்கை கடற்றொழில் அமைச்சோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

மேலும், இலங்கையில் எதிர்க்கட்சியாக உள்ள ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு எவ்வித கொள்கையும் இல்லை எனவும் அவர் இதன்போது சாடினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை