Welcome to Jettamil

தியேட்டர்களில் ‘கருப்பு’ திருவிழா! – ஆர்.ஜே. பாலாஜி – சூர்யா கூட்டணியின் அதிரடி ஆரம்பம்!

Share

தியேட்டர்களில் ‘கருப்பு’ திருவிழா! – ஆர்.ஜே. பாலாஜி – சூர்யா கூட்டணியின் அதிரடி ஆரம்பம்!

நேற்றைய தினம் வெளியாக வேண்டிய ‘கருப்பு’ திரைப்படம், சில தொழில்நுட்ப சிக்கல்களால் வெளியாகாதது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் மிகவும் மனமுடைந்த இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி, கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ ரசிகர்களைப் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால், அத்தனை தடைகளையும் உடைத்து இன்று (மே 15) படம் திரைக்கு வந்துள்ளது.

அதிகாலை முதலே தியேட்டர்களில் சூர்யாவின் ரசிகர்கள் மேளதாளங்களுடன் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

சூர்யா – த்ரிஷா கூட்டணி நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைந்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. சாய் அபயங்கரின் இசை மற்றும் ஆர்.ஜே. பாலாஜியின் திரைக்கதை படத்திற்குத் தேவையான வேகத்தைக் கொடுத்துள்ளதாகப் படம் பார்த்த ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

யோகி பாபுவின் நகைச்சுவை மற்றும் ஜார்ஜ் மரியான், இந்திரன்ஸ் போன்றோரின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. ஒரு சமூகக் கருத்தை ஆர்.ஜே. பாலாஜி தனது பாணியில் நேர்த்தியாகக் கையாண்டுள்ளதாகத் தெரிகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை