Welcome to Jettamil

வாகனக் கொள்வனவுக்குத் தடை! – ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு

Share

வாகனக் கொள்வனவுக்குத் தடை! – ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசாங்கத்திற்காகப் புதிய வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை மேலாண்மை செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, கடந்த மே மாதத்தில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கம் 550 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.

“நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்குத் தேவையற்ற செலவினங்களைக் குறைப்பது காலத்தின் கட்டாயம்” என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

எரிபொருளுக்காகப் பாரிய தொகை செலவிடப்படுவதால், அரச துறையில் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்தத் தற்காலிகத் தடையானது அரசின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை