Welcome to Jettamil

கனமழையால் வேரோடு சாய்ந்த வரலாற்றுப் பெருக்கு மரம்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்!

Share

கனமழையால் வேரோடு சாய்ந்த வரலாற்றுப் பெருக்கு மரம்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி மகளிர் கல்லூரி வளாகத்தில் நீண்ட காலமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த பாரிய பெருக்கு மரம் ஒன்று, இன்று பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக வேரோடு சாய்ந்துள்ளது.

பல ஆண்டுகளாக அந்தப் பாடசாலையின் அடையாளமாகவும், அப்பகுதி மக்களின் வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்ந்த இந்த மரம், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்களால் மிகுந்த அர்ப்பணிப்புடன் பாதுகாத்து வரப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் நிழலுக்காகவும், ஓய்வுக்காகவும் பயன்படுத்திய இந்த மரம் சரிந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக மரம் சாய்ந்த போது மாணவர்கள் எவரும் அருகில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை