Welcome to Jettamil

அட்லீ – பிரியா தம்பதியின் மகளுக்கு ஜப்பானியப் பெயர்! – “மியோ” (Miyou) பெயரின் ரகசிய அர்த்தம் என்ன?

Share

அட்லீ – பிரியா தம்பதியின் மகளுக்கு ஜப்பானியப் பெயர்! – “மியோ” (Miyou) பெயரின் ரகசிய அர்த்தம் என்ன?

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங்காக வலம் வந்து, தற்போது பாலிவுட் வரை தடம் பதித்துள்ள இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா இருவருக்கும் சமீபத்தில் இரண்டாவது குழந்தையாக அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், தனது மகளுக்கு “மியோ” (Miyou) எனப் பெயர் சூட்டி இருப்பதாக அட்லீ தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது ஒரு தூய ஜப்பானிய மொழிப் பெயர் என்றும், இப் பெயருக்கு ‘அழகு’, ‘மென்மை’ மற்றும் ‘அன்பு’ என்பதுதான் உண்மையான அர்த்தம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அட்லீ தனது மகளின் பெயரை அறிவித்த சில நிமிடங்களிலேயே, சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, அட்லீ தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனை வைத்து ‘ராக்கா’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.

ஹாலிவுட் தரத்தில் அதிக கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருவதால், அட்லீ தனது குடும்பத்துடன் தற்காலிகமாக மும்பையிலேயே செட்டில் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை