கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்!
இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் கொன்றொழிக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் உறவுகளின் 17-ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
தமிழினப் படுகொலை நினைவுத்தூபியில் பிரதான பொதுச் சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் தொடங்கின.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வருகை தந்துள்ள பல்வேறு மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மதகுருமார்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் தங்களின் சொந்த பந்தங்களை இழந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் எனப் பலரும் நினைவுத்தூபியில் மலர் தூவி, சுடரேற்றிக் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.





