Welcome to Jettamil

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்குத் தெரியும்; ஆனால் சொல்ல மாட்டேன்! – சரத் பொன்சேகா அதிரடிப் பேட்டி!

sarath

Share

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்குத் தெரியும்; ஆனால் சொல்ல மாட்டேன்! – சரத் பொன்சேகா அதிரடிப் பேட்டி!

அண்மையில் வலையொளித் தளம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், பிரபாகரனின் சடலத்திற்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “பிரபாகரன் போரில் கொல்லப்பட்டுவிட்டார், இது இரகசியமல்ல. அவரது சடலம் மீட்கப்பட்டதும் கருணாவை விமானத்தில் அனுப்பி, பிரபாகரன், சூசை மற்றும் பொட்டு அம்மானின் மனைவி ஆகியோரின் சடலங்களை அடையாளம் கண்டோம்.

பிரபாகரனின் சடலத்தில் பாரிய காயங்கள் இருந்தன. அவர் விடுதலைப் புலிகளின் சீருடையில் இருந்ததால், அந்தச் சீருடையை உடனடியாக அகற்றுமாறு நான் கட்டளையிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரபாகரனின் சடலத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துத் தானே இறுதி ஆலோசனைகளை வழங்கியதாகக் குறிப்பிட்ட சரத் பொன்சேகா, “குறிப்பிட்டதொரு பகுதியிலேயே இறுதியாக செய்யவேண்டியவற்றைச் செய்தோம்.

ஆனால், அந்த இடத்தை நான் பகிரங்கமாகச் சொல்ல மாட்டேன். அவ்வாறு கூறினால், அந்த இடத்திற்குச் சென்று சிலர் நினைவேந்தல்களை நடத்த முற்படலாம் அல்லது அங்கு நினைவகம் ஒன்றை அமைக்கவும் முயற்சிக்கலாம்.

அத்துடன், பிரபாகரனை உயிருடன் பிடிக்கும் எந்தவொரு திட்டமும் தமக்கு இருக்கவில்லை” என்றும் அவர் அந்த நேர்காணலில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Source: IBC

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை