Welcome to Jettamil

விடுதியில் தீ விபத்து – அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு பிஞ்சு குழந்தைகள் பலி!

Share

விடுதியில் தீ விபத்து – அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு பிஞ்சு குழந்தைகள் பலி!

பஸ்ஸார பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காகக் கடந்த 23ஆம் தேதி மட்டக்களப்பிற்கு வந்து, அங்குள்ள பிரபல விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளது. தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 5 வயதுடைய சந்தனி நிமாஷா என்ற பெண் குழந்தையும், 3 வயதுடைய கசுன் மதுசங்க என்ற ஆண் குழந்தையும் விடுதி அறையில் தந்தையுடன் இருந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று தந்தை மதுபானம் அருந்துவதற்காக இரண்டு குழந்தைகளையும் அறைக்குள்ளேயே வைத்து, கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

தந்தை வெளியே சென்றிருந்த நேரத்தில், அந்த அறைக்குள் திடீரென பயங்கரத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் தந்தை விடுதிக்குத் திரும்பிய போது, அறைக்குள் தீப்பற்றி எரிவதையும், குழந்தைகள் இருவரும் நச்சுப் புகையைச் சுவாசித்து மயங்கிக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

விடுதி ஊழியர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், மீட்கப்பட்ட இரு குழந்தைகளும் அவசரமாக மட்டக்களப்பு போதனா (ஆதார) வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை