Welcome to Jettamil

இஸ்லாமிய மக்களுக்கு ஜனாதிபதி அநுர ஹஜ் பெருநாள் வாழ்த்து !

Share

இஸ்லாமிய மக்களுக்கு ஜனாதிபதி அநுர ஹஜ் பெருநாள் வாழ்த்து !

அல்லாஹ் மீதான இப்ராஹீம் நபியின் இணையற்ற பக்தியையும், எல்லையற்ற தியாகத்தையும் அடையாளப்படுத்தும் இந்த ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி அநுர வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

நெருக்கடிகளுக்கு மேல் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் இவ்வுலகில், மனிதர்களுக்கிடையே நிலவ வேண்டிய பிணைப்பின் மகத்துவத்தை ஹஜ் பெருநாள் உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட அந்தஸ்துகளுக்கு அப்பாற்பட்டு, உலகெங்கிலும் இருந்து வரும் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து மத வழிபாடுகளை நிறைவேற்றும் இச்சந்தர்ப்பம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான மிகச் சிறந்த உலகளாவிய முன்மாதிரி என்றும் ஜனாதிபதி தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கின் தற்போதைய யுத்த சூழ்நிலை காரணமாக முழு உலகமும் கடினமான சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், மக்கா நகருக்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் தியாகத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி போற்றியுள்ளார்.

சுயநலத்திற்குப் பதிலாகப் பொதுநலம் மேலோங்கிய, அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த ஒத்துணர்வுள்ள மனித சமூகத்தைக் கட்டியெழுப்புவதே தமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆன்மீக விழுமியங்களால் இலங்கை சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும் பயன் கிடைக்கக்கூடிய அபிவிருத்தியடைந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காகச் சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் செல்லுமாறு சகலருக்கும் அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி, அனைவருக்கும் “ஈத் முபாரக்” எனத் தனது வாழ்த்துக்களை நிறைவு செய்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை