Welcome to Jettamil

10 வயது சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறை!

Share

10 வயது சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறை!

வீட்டு வறுமை காரணமாகத் தனது பிள்ளைக்குச் சிறந்த கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பெற்றோர்களால் கலென்பிந்துனுவெவ பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் 10 வயது சிறுவன் ஒருவன் ஒப்படைக்கப்பட்டிருந்தான்.

அச்சிறுவனைத் தொடர்ந்து கடுமையான பாலியல் துர்நடத்தைகளுக்கு உட்படுத்தியதாக அந்த விகாரையின் விகாராதிபதி மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், குறித்த பிக்குவிற்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும், அதனைத் தவறவிட்டால் மேலதிகமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

எனினும், குற்றவாளியான பிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாது தலைமறைவாகியுள்ளதால், அவர் இல்லாத நிலையிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டு, அவரைக் கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை