Welcome to Jettamil

கைதுக்கு பின்பே சங்கீத்சனின் னின் திறமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது! – இளங்குமரன் எம்பி தெரிவிப்பு

Share

கைதுக்கு பின்பே சங்கீத்சனின் னின் திறமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது! – இளங்குமரன் எம்பி தெரிவிப்பு

தாயகப் பாடகர் சங்கீத்சன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிக முக்கியமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கைது செய்யப்பட்டவர் சட்டத்தின் அடிப்படையில் நியாயமான விசாரணையைப் பெற்று, சட்டத்தின் ஊடாகவே விடுதலையாக வேண்டும் என்பதே எமது நிலைப்பாடும் இலக்குமாகும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில் ஒரு இளம் பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த சில அரசியல்வாதிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் எமக்கு அது ஆழமான மனவேதனையையே தந்துள்ளது என்றார்.

இன்று காவல்துறையினர் கைது செய்த பின்னரே அந்த இளைஞரைப் பற்றிப் பலரும் பேசுகின்றனர் என்றும், இதுவரை அவரது திறமையையும் படைப்புகளையும் கண்டுகொள்ளாதவர்கள் இப்போது கருத்துத் தெரிவிக்க முன்வருவதாகவும், குறைந்தபட்சம் இப்போதாவது அவரது திறமை வெளிச்சத்திற்கு வந்திருப்பது ஒரு வகையில் சங்கீதனுக்கான வெற்றி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இசை என்பது மக்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவம் என்று குறிப்பிட்ட இளங்குமரன் எம்.பி, கலைஞர்கள் தங்களது உணர்வுகளை இசை ஊடாக வெளிப்படுத்தும் போது, அதனால் அவர்கள் பாதிக்கப்படாத வகையில் எதிர்காலத்தில் சட்டங்களில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பல திறமையான பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் இருந்தும், அவர்களுக்கு முறையான அங்கீகாரமும் பிரதிபலனும் கிடைப்பதில்லை என ஆதங்கப்பட்டார்.

சிலரின் திறமைகள் திருடப்பட்டு, பிறரால் வணிகப் பொருளாதார பலன்கள் பெற்றுக்கொள்ளப்படும் நிலையில், உண்மையான திறமையாளர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்றும், இக்கைதுக்கு முன்னரே அவரது பாடல்களை எத்தனை பேர் கவனமாகக் கேட்டார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் எனக் கூறித் தனது பதிவை நிறைவு செய்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை