Welcome to Jettamil

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய திட்டம்? – சுகீஸ்வர பண்டார தெரிவிப்பு

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய திட்டம்? – சுகீஸ்வர பண்டார தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை விரைவில் கைது செய்வதற்கான திட்டம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் உள்ளதாக, நவஜனதா பெரமுண கட்சியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் அந்தரங்க செயலாளராக இருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என நம்பகமான தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்காகவே முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்கனவே பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த நடவடிக்கை அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் பழிவாங்கல் முயற்சி எனவும், இது நீதிமுறையை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் சுகீஸ்வர பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை