கொஞ்சம் கூட சாப்பிட முடியல! கண்ணீருடன் மனம் திறந்த சமந்தா – எடை குறைந்ததற்கான உண்மை காரணம் இதுதான்!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, கடந்த சில ஆண்டுகளாக தன்னை பாதித்த மயோசிடிஸ் நோய் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
சமீப காலமாக அவர் மிகவும் எடை குறைந்து காணப்பட்டதால், ரசிகர்கள் பலரும் “ஏன் இவ்வளவு ஒல்லியாகிவிட்டீர்கள்?” என கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு தற்போது அவர் மனம் திறந்து பதிலளித்துள்ளார்.
தனது புதிய படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, “நான் சாப்பிட விரும்பவில்லை என்பதல்ல, என்னால் சாப்பிட முடியவில்லை. நான் சாப்பிடும் சில உணவுகள் என் நோயின் தாக்கத்தை அதிகரித்துவிடும். செரிமான மண்டலத்தில் சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும், மயோசிடிஸ் பாதிப்பு தீவிரமடையும்” என தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றியதாகவும், காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் சுவையற்ற மற்றும் ஒரே மாதிரியான உணவுகளை மட்டுமே உட்கொண்டதாகவும் அவர் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
மேலும், தனது செல்லப் பூனைக்கு “ஜெலாட்டோ” என பெயர் வைத்ததற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.
சிகிச்சை காலத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி சாப்பிட்ட சில சுவையான உணவுகளில் ஜெலாட்டோ ஐஸ்கிரீம் முக்கியமானதாக இருந்ததால், அந்த நினைவாகவே தனது பூனைக்கு அந்த பெயரை வைத்ததாக சமந்தா தெரிவித்துள்ளார்.
நோயுடன் போராடிய அந்த கடினமான காலத்தை நினைவுகூர்ந்த அவரது இந்த உணர்ச்சிமிகு பேட்டி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.





