ஆந்திராவில் ஒரு KGF இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க சுரங்கம் – தங்க விலையில் ஏற்படுமா மாற்றம்?
இந்தியா தனது தங்கத் தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து வருகிறது.
இதனால் சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் நேரடியாக இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் கழுத்தை நெரிக்கும் வகையில் தங்க விலையை உயர்த்தி வருகின்றன.
ஒரு காலத்தில் கோலார் தங்க சுரங்கம் மூலம் உற்பத்தியில் முன்னிலையில் இருந்த இந்தியா, காலப்போக்கில் இறக்குமதியைச் சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
இந்த நிலையை மாற்றும் வகையில், தற்போது ஆந்திரப் பிரதேசத்தின் ஜொன்னகிரி பகுதியில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது.
Geomysore Services என்ற தனியார் நிறுவனத்தின் கீழ், இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கமாக இது செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
ஆரம்பகட்டத்தில் 600 கிலோ தங்கம் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சுரங்கத்தில், அடுத்த 15 ஆண்டுகளில் ஆண்டுக்கு 1000 கிலோ தங்கம் வரை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவின் இறக்குமதிச் செலவு குறைந்து, ஆபரணத் தங்கத்தின் விலையும் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.




