Welcome to Jettamil

திட்டம் இருக்கு தேர்தல் கிட்ட வரட்டும் – இந்த ஆண்டிற்குள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவேன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Share

திட்டம் இருக்கு தேர்தல் கிட்ட வரட்டும் – இந்த ஆண்டிற்குள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவேன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இந்த வருடம் ஆட்சியை பிடிப்பதற்கான பாரிய திட்டம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே மஹிந்த ராஜபக்ஷ இந்த அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, இம்முறை மக்களிடையே புத்தாண்டு உற்சாகம் தென்படவில்லை என அவர் கவலை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், எதிர்வரும் மே தினம் வைகாசி பௌர்ணமி தினத்தில் வருவதால், அரசியல் கூட்டங்களைத் தவிர்த்து ஆன்மீக நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாகக் குறிப்பிட்டார்.

அரசியல் மாற்றங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, ‘நிச்சயமாக இந்த ஆண்டு அரசியல் மாற்றம் ஏற்படும்; ஆட்சியைப் பிடிக்கப் பாரிய ரகசியத் திட்டம் ஒன்றை வைத்துள்ளோம்’ எனத் தெரிவித்தார்.

சவால்களை எதிர்கொள்ளத் தமது கட்சி முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் அவர் இதன்போது சூளுரைத்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை