Welcome to Jettamil

பசியால் முந்திரி பழம் பறித்தவர் சுட்டுக்கொலை – இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Share

பசியால் முந்திரி பழம் பறித்தவர் சுட்டுக்கொலை – இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லு பகுதியில் முந்திரி தோட்டத்துக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் கரதீவு பகுதியில் அமைந்துள்ள முந்திரி தோட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் அத்துகோரலகே பிரதீப் சுசாந்த (38) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த முந்திரி தோட்டம் அறுவடைக்காக தனியார் நபர் ஒருவரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. தோட்டத்தை பாதுகாப்பதற்காக பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், தோட்டத்துக்குள் இரகசியமாக நுழைந்து முந்திரி பறிக்க முயன்றதாகக் கூறப்படும் நபர் மீது பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபர் உடனடியாக புத்தளம் தள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உணவுக்காக அல்லது பசியின் காரணமாக முந்திரி பழங்களைப் பறிக்கச் சென்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தக் கொ*லைச் சம்பவம் தொடர்பாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் நபர் உட்பட மொத்தம் 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கைது செய்யப்பட்டவர்களை புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனாத்தவில்லு பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை