உலகளவில் முடங்கியது மெட்டா சேவைகள்: ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் கடும் அவதி!
இன்று ஜூன் 12 ஆம் தேதி மாலை, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் திடீரெனச் செயலிழந்தன. குறிப்பாக, பயனர்கள் தங்களது கணக்குகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே, அவை தானாகவே ‘லாக்-அவுட்’ ஆகியுள்ளன.
அதன் பின்னர் சரியான கடவுச்சொல்லை (Password) உள்ளீடு செய்த போதிலும், “எதிர்பாராத பிழை ஏற்பட்டுள்ளது” (Unexpected error occurred) அல்லது “தற்போது பக்கத்தை அணுக முடியாது” (Page not available) என்ற பிழைச் செய்திகளே திரையில் தோன்றின. இதனால் தங்களது கணக்குகள் ஏதேனும் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு விட்டதோ என்ற அச்சத்தில் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் இந்தத் கோளாறு ஒரே நேரத்தில் நீடித்தது.





