Welcome to Jettamil

புதிய வரலாற்றுச் சாதனை படைத்த நரேந்திர மோடி! – இலங்கை ஜனாதிபதி அநுர வாழ்த்து!

Share

புதிய வரலாற்றுச் சாதனை படைத்த நரேந்திர மோடி! – இலங்கை ஜனாதிபதி அநுர வாழ்த்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஜூன் 10ஆம் தேதி நிலவரப்படி பிரதமர் பதவியில் 4,399 நாட்களை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து, தொடர்ச்சியாக நீண்ட காலம் பதவியில் இருந்த இந்தியப் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தச் சிறப்பான தருணத்திற்காக இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

“இந்த மைல்கல் மோடியின் நீண்டகால சேவையை மாத்திரமன்றி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் அவரது தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது” என ஜனாதிபதி அநுர தனது கடிதத்தில் பாராட்டியுள்ளார்.

கடந்த 2014 மே 26 அன்று முதன்முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற மோடி, 2019 இல் பெரும்பான்மை ஆதரவுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2024 பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாகத் தொடர்ச்சியாகப் பிரதமராகப் பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 12 ஆண்டுகாலப் பயணத்தில் வறுமையைக் குறைத்தல், நலத்திட்டங்களை விரிவுபடுத்துதல், டிஜிட்டல் கட்டண முறைகளின் அசுர வளர்ச்சி, சாலை, ரயில் மற்றும் வான்வழி உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா அசாத்திய முன்னேற்றம் அடைந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

“தனது 12 ஆண்டுகாலப் பயணம் மக்களின் நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பயணம்” என மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை