27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘அமர்க்களம்’! அஜித் – ஷாலினி திருமண நாளில் ரசிகர்களுக்குப் பெரும் விருந்து
தமிழ் சினிமாவில் கிளாசிக் ஹிட் படங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து மீண்டும் வெளியிடும் டிரெண்ட் தற்போது அதிகரித்துள்ளது.
அந்த வரிசையில், 1999-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அமர்க்களம்’ திரைப்படம், அஜித்குமார் – ஷாலினி தம்பதிகளின் 26-வது திருமண நாளை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 24) தமிழ்நாடு முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சரண் இயக்கத்தில் உருவான இந்தப் படம், அஜித்தின் திரைப்பயணத்தில் 25-வது படம் என்பதுடன், அவர் தனது மனைவி ஷாலினியுடன் இணைந்து நடித்த படம் என்ற சிறப்பையும் கொண்டது.
பரத்வாஜ் இசையில் உருவான “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்”, “உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு” போன்ற காலத்தால் அழியாத பாடல்களைத் திரையில் மீண்டும் கண்ட ரசிகர்கள், உற்சாகத்தில் தியேட்டர்களை அதிர வைத்து வருகின்றனர்.



