ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் பஹ்லவி மீது தக்காளி வீசி தாக்குதல்
ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரேஸா பஹ்லவி, தற்போது ஜெர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பெர்லினில் உள்ள ஒரு கட்டிடத்திலிருந்து அவர் வெளியே வந்தபோது, அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் அவர் முதுகில் தக்காளி கெட்ச்அப் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளியை ஈரானிய அரசு ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அநாகரீகமான தாக்குதலால் இளவரசரின் உடையில் சிவப்பு நிறத் திரவம் படிந்துள்ளதைக் காண முடிகிறது.
இந்தத் தாக்குதலுக்கு மத்தியிலும் தனது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள பஹ்லவி, ஈரானிய ஆட்சியின் மீது அழுத்தம் கொடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸைச் சந்தித்துப் பேசிய அவர், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளைக் கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
“ஈரானியர்களின் சுதந்திரப் போராட்டத்தின் குரலாக நான் பெர்லினுக்கு வந்துள்ளேன்; அரசியல் கைதிகளை விடுவிக்கவும், மரணதண்டனைகளை நிறுத்தவும் ஐரோப்பா இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும்” என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.




