ஈரானின் சக்கரவியூகத்தில் சிக்கிய அமெரிக்கா : ஈரான் போட்ட மாஸ்டர் பிளான்
நவீன வான் பாதுகாப்பு முறைகளை ஈரான் தனது மலிவு விலை ‘தற்கொலை ட்ரோன்கள்’ (Kamikaze Drones) மூலம் நிலைகுலையச் செய்து வருகிறது.
அதாவது வெறும் 20,000 டொலர் பெறுமதியான ஒரு ஈரானிய ட்ரோனைச் சுட்டு வீழ்த்துவதற்கு, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் 20 இலட்சம் முதல் 40 இலட்சம் டொலர் (2 – 4 Million USD) பெறுமதியான ஏவுகணைகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஈரானின் இந்த சக்கரவியூகத்தில் மாட்டிக்கொண்ட அமெரிக்க இராணுவத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்கா போரில் இருந்து விலகவும் முடியாமல், ஈரானின் குறைந்த விலை ட்ரான் களுக்கு அதிகவிலை கொண்ட ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தவும் முடியாமல் திணறி வருகிறது.
மத்திய கிழக்கில் தற்போது நடைபெற்று வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) போர் நடவடிக்கையின் போது, ஈரான் இத்தகைய ட்ரோன்களைக் கூட்டமாக (Swarm) ஏவி வருகிறது.

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஒரே நேரத்தில் ஏவும் போது, அவற்றை எதிர்கொள்ள அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணைத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
ஏவுகணைகளுக்காகக் கோடிக்கணக்கான டொலர்களைச் செலவிடுவதைத் தவிர்க்க, லேசர் ஆயுதங்கள் மற்றும் மலிவான இடைமறிப்பு ட்ரோன்களைப் பயன்படுத்த அமெரிக்கா தற்போது தீவிரமாக முயற்சித்து வருகிறது.
ஈரானின் இந்த ‘குறைந்த செலவு – அதிக சேதம்’ என்ற தந்திரோபாயம், எதிர்கால வான் பாதுகாப்பு வியூகங்களையே மாற்றியமைக்க வல்லது எனப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவின் ஆயுதக் கிடங்குகளைக் காலி செய்வதே ஈரானின் இந்தத் திட்டத்தின் பின்னால் உள்ள முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.





