என்னை அமைதியாக உறங்க விடுங்கள் – பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் கருணைக்கொலை அனுமதி!
ஸ்பெயினைச் சேர்ந்த 25 வயதுடைய நோலியா காஸ்டிலோ ராமோஸ், கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கொடூரமான கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தினால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதனால் தற்கொலைக்கு முயன்ற அவர் உயிர் பிழைத்த போதிலும், அவரது இடுப்புக்குக் கீழ்ப்பகுதி முழுமையாகச் செயலிழந்தது. “எனது ஆறாத துயரத்தை நிறுத்த விரும்புகிறேன், நான் அமைதியாக இருக்க விரும்புகிறேன்” எனக் கோரி அவர் கருணைக்கொலைக்கு அனுமதி கோரியிருந்தார்.
தற்போது ஸ்பெயின் அரசியல் சாசன நீதிமன்றம் மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் இதற்கு உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளன.
நோலியாவின் தந்தை, கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவுடன் தனது மகளின் முடிவிற்கு எதிராக 18 மாதங்களாகப் போராடி வந்தார். “எனது மகளுக்குச் சரியான முடிவெடுக்கும் திறன் இல்லை; உயிரைப் பாதுகாப்பதே அரசின் கடமை” என்று அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
எனினும், ஒரு தனிநபரின் கௌரவமான மரணத்திற்கான உரிமையை (Right to Die with Dignity) மதித்து, நோலியாவின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, அதன் பின்விளைவுகளாக ஏற்படும் மன மற்றும் உடல் ரீதியான பாதிப்புகளுக்காகக் கருணைக்கொலை வழங்கப்படுவது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.





