யாழ்ப்பாணத்தில் மணல் கடத்தல் மாஃபியாவின் கொடூரம்! பொலிஸ் அதிகாரி மீது உழவு இயந்திரத்தை ஏற்றிப் படுகொலை
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்று (28.03.2026) அதிகாலை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் ஒன்றை மறிக்க முற்பட்டனர்.
இதன்போது, பொலிஸாரின் கட்டளையை மீறிய உழவு இயந்திரச் சாரதி, அதன் வேகத்தை அதிகரித்து அங்கிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்த கோர விபத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தினை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய உழவு இயந்திரச் சாரதியைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
மணல் கடத்தலில் ஈடுபடும் மாஃபியாக்கள் பொலிஸார் மீதே தாக்குதல் நடத்தியுள்ளமை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





