Welcome to Jettamil

கடலில் வீழ்ந்த அமெரிக்க போர் விமானம்

Share

கடலில் வீழ்ந்த அமெரிக்க போர் விமானம்

தென்கொரிய கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானது.

தென்கொரியாவின் வடக்கு ஜொயலா மாகாணம் ஜிக்டோ தீவு அருகே மேற்கு பசுபிக் கடல் பகுதியில் எப்.16 ரக அமெரிக்க போர் விமானம் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

அப்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானி பாரசூட் மூலம் வெளியேறி உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து அறிந்த தென்கொரிய கடற்படையினர் விரைந்து சென்று கடலில் விழுந்த விமானியை பத்திரமாக மீட்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை