உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகப் பரீட்சைத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, குறித்த பெறுபேறுகள் நாளை (மார்ச் 31) அல்லது நாளை மறுநாள் (ஏப்ரல் 1) வௌியாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது . சுமார் மூன்று இலட்சம் மாணவர்கள் இந்தப் பெறுபேறுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி தொடங்கிய இந்தப் பரீட்சையானது, ‘டித்வா’ (Ditwah) புயல் காரணமாகப் பெரும் சவால்களைச் சந்தித்தது. புயல் பாதிப்பால் பல பாடங்களின் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் கடந்த ஜனவரி மாதம் 12 முதல் 20 வரை மீள நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





