Welcome to Jettamil

அரசாங்கம் பொய்கள் போதாதென்று திருட்டுகளிலும் ஈடுபடுகிறது! – ரணில் விக்ரமசிங்க

Share

அரசாங்கம் பொய்கள் போதாதென்று திருட்டுகளிலும் ஈடுபடுகிறது! – ரணில் விக்ரமசிங்க

தற்போதைய அரசாங்கம் பொய்களைக் கூறுவது போதாதென்று, பாரிய திருட்டுகளிலும் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

மாளிகாவத்தையில் நேற்று நடைபெற்ற சஜித் பிரேமதாச தலைமையிலான மே தினக் கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில், நிலக்கரி மோசடி மற்றும் மத்திய திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமானமை போன்றவற்றைச் சமீபகாலத்தின் மிகப்பெரிய ஊழல்களாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என அவர் சாடியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை கையில் எடுத்துள்ள “உருட்டு, பிரட்டு, திருட்டு” என்ற வாசகம் தற்போதைய ஆட்சிக்கு மிகவும் பொருத்தமானது என ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையிலும் ஆளும் தரப்பினர் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகக் குறிப்பிட்ட அவர், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பயணிப்பது குறித்து நியமிக்கப்பட்ட குழுவின் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு தனது அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை