ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன பாரதிராஜா! ராதிகாவுடன் பேசும் காணொளி வைரல்
தமிழ் சினிமாவின் கிராமியக் கதைகளின் தந்தை என அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
குறிப்பாக, கடந்த 2025 மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து, பாரதிராஜா பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.
நுரையீரல் தொற்று காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தற்போது வீடு திரும்பியுள்ளார். ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் உடல் மெலிந்து, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் மாறியிருப்பது ரசிகர்களைக் கவலையடையச் செய்துள்ளது.
இந்நிலையில், தனது ஆசான் பாரதிராஜாவை நடிகை ராதிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது ராதிகா நடித்த ‘தாய் கிழவி’ படத்தைப் பார்த்த பாரதிராஜா, “உனக்குத் தேசிய விருது கிடைக்க வேண்டும், படம் மிக நன்றாக இருக்கிறது” என மனதார வாழ்த்தினார்.
அதற்குப் பதிலளித்த ராதிகா, “நீங்கள் சொன்னபடியே நடக்கட்டும், விருது வாங்கினால் உங்கள் காலடியில் வைத்து ஆசீர்வாதம் வாங்குவேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.




