யுத்தம் இன்னும் முடியவில்லை! – ஈரானுக்கு எதிராக பெஞ்சமின் நெதன்யாகு ஆவேச உரை
ஆர்ஜென்டீன ஜனாதிபதி ஜேவியர் மிலியின் இஸ்ரேல் வருகையை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பிரதமர் நெதன்யாகு, ஈரானுக்கு எதிரான போர் என்பது வெறும் எல்லைப் போர் அல்ல, அது ‘நாகரிகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும்’ இடையிலான போர் என வர்ணித்தார்.
“உலகையே அச்சுறுத்தி வரும் ஈரானின் கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து போராடி வருகின்றன. மேற்கத்திய நாகரிகத்தையே வீழ்த்த நினைக்கும் ஈரானின் திட்டங்களை முறியடிப்பதே எமது நோக்கம்” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் இஸ்ரேல் பாரிய வெற்றிகளைப் பெற்றுள்ள போதிலும், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என நெதன்யாகு சுட்டிக்காட்டினார்.
“எந்த நேரத்திலும் புதிய திருப்பங்கள் ஏற்படலாம். நாளை அல்லது நாளை மறுதினம் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது” என அவர் மர்மமான முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுதந்திர உலகிற்கு அதிக நம்பிக்கையையும் ஒளியையும் கொண்டு வரும் வரை அமெரிக்காவுடனான இந்தத் தாக்குதல் தொடரும் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.





