சுவை கமழும் மட்டன் தம் பிரியாணி… ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!
பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவு. அதிலும் மணமும் சுவையும் நிறைந்த மட்டன் தம் பிரியாணி என்றால் சொல்லவே வேண்டாம். ஈத் விருந்து முதல் குடும்ப விழா வரை எந்த சிறப்பு நாளாக இருந்தாலும் இந்த பிரியாணி மேசையை கலக்கிவிடும்.
வழக்கம்போல் இல்லாமல் தம் முறையில் செய்யும் இந்த மட்டன் பிரியாணி, நறுமணமும் ருசியும் அள்ளித் தரும்.
தேவையான பொருட்கள்
1 கிலோ மட்டன்
1 கிலோ பாஸ்மதி அரிசி (1 மணி நேரம் ஊறவைத்தது)
மட்டன் ஸ்டாக்கிற்கு
2 பெரிய வெங்காயம்
2 டீஸ்பூன் பெருஞ்சீரகம்
2 டீஸ்பூன் தனியா
1 பட்டை
4–5 கிராம்பு
2 கருப்பு ஏலக்காய்
2 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
உப்பு தேவையான அளவு
பிரியாணி மசாலா
1 கப் தயிர்
2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
1 டீஸ்பூன் கரம் மசாலா
4–5 பச்சை மிளகாய்
1 கப் நெய் அல்லது எண்ணெய்
நறுமண மசாலா
1 டீஸ்பூன் ஜாதிக்காய் பூ
அன்னாசிப்பூ
5–6 பச்சை ஏலக்காய்
செய்முறை
முதலில் மட்டனை வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு மற்றும் மசாலாவுடன் 80% வரை வேக வைத்து ஸ்டாக்கை தனியாக எடுத்துவைக்கவும்.
பெரிய பாத்திரத்தில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி முழு மசாலா மற்றும் பச்சை மிளகாயை வதக்கவும். அதில் வேகவைத்த மட்டனை சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
பின்னர் தயிர், மிளகாய்த் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்க வேண்டும். அதன் பின் மட்டன் ஸ்டாக் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
இப்போது ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும். மேலே ஜாதிக்காய் பூ, ஏலக்காய் தூள், கேவ்ரா தண்ணீர் மற்றும் வறுத்த வெங்காயம் தூவவும்.
இறுதியாக பாத்திரத்தை இறுக்கமாக மூடி 15–20 நிமிடங்கள் தம் போடுங்கள்.
அவ்வளவுதான்… மணமும் சுவையும் கமழும் அட்டகாசமான மட்டன் தம் பிரியாணி ரெடி!





