100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ஆபத்தான ‘சூல யோகம்’! இந்த 5 ராசிக்காரர்களுக்குக் காத்திருக்கும் பேராபத்து
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, பிரபஞ்சத்தில் ஜூன் 14ஆம் தேதி மதியம் 1:15 மணிக்குத் தொடங்கும் இந்தச் ‘சூல யோகமானது’, ஜூன் 15ஆம் தேதி காலை 8:56 மணி வரை நீடிக்கவுள்ளது.
குறுகிய காலம் இந்த யோகம் உருவானாலும், இதன் எதிர்மறையான தாக்கம் சில நாட்கள் வரை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மிதுன ராசிக்காரர்களுக்குக் கடுமையான மன அழுத்தமும், நிதி இழப்புகளும் ஏற்படலாம் என்பதால் புதிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு அவசர முடிவுகளால் பெரிய நஷ்டமும், உடல் சோர்வும் ஏற்படும். தனுசு ராசிக்காரர்கள் யாருக்கும் கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மேலும், மகர ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரால் கடும் தொல்லைகள் ஏற்படுவதுடன், விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் தேவை என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கும்ப ராசிக்காரர்கள் நினைத்தது எதுவும் நடக்காமல் கடும் எரிச்சலையும், குடும்பத்தினரின் ஆரோக்கியக் குறைபாடுகளையும் சந்திக்க நேரிடும். இக்காலத்தில் இந்த 5 ராசிக்காரர்களும் புதிய முயற்சிகளைத் தவிர்த்து, மன அமைதியுடனும் பொறுமையுடனும் இறை வழிபாடுகளில் ஈடுபடுவது மட்டுமே தங்களைக் காத்துக்கொள்ளும் ஒரே வழி என ஆன்மீக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.




