மாத்தளையில் குடும்ப வன்முறை: தந்தையைக் கொடூரமாகக் கொன்ற மகன்!
மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிரஹபிட்டிய பிரதேசத்தில் நேற்று (ஏப்ரல் 24) காலை இக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் எல்லை மீறிய நிலையில், ஆத்திரமடைந்த மகன் கூர்மையான ஆயுதத்தை எடுத்துத் தந்தையைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த 64 வயதுடைய தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் 33 வயதுடைய உயிரிழந்தவரின் மகனை மாத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, நீண்ட நாட்களாக நிலவி வந்த குடும்பப் பிரச்சினையே இந்த வன்முறைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.





