Welcome to Jettamil

பிரித்தானியாவைத் தொடாதே! – ஈரானுக்கு பிரித்தானியா நேரடி எச்சரிக்கை

Don't touch Britain! - Britain's direct warning to Iran

Share

பிரித்தானியாவைத் தொடாதே! – ஈரானுக்கு பிரித்தானியா நேரடி எச்சரிக்கை

பிரித்தானியாவின் இராணுவத் தளங்கள், நிலப்பரப்பு அல்லது அதன் நலன்களை நேரடியாகக் குறிவைக்க வேண்டாம் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சிற்குப் பிரித்தானியா நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் இவெட் கூப்பர், ஈரானிய அமைச்சருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே இந்தத் தீர்க்கமான எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்கா பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்தினால் அது தங்களுக்கு எதிரான நேரடி ஆக்கிரமிப்பு என ஈரான் முன்னதாக அச்சுறுத்தல் விடுத்திருந்தது.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள இவெட் கூப்பர், பிரித்தானியாவின் தற்காப்பு நடவடிக்கைகள் அனைத்தும், வளைகுடா நட்பு நாடுகளுக்கு எதிராக ஈரான் முன்னெடுக்கும் ஆக்கிரமிப்பிற்கு அளிக்கப்படும் முறையான பதிலடி எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழலுக்கு அமைதியான தீர்வைக் காணப் பிரித்தானியா விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள போதிலும், தனது பாதுகாப்பு நலன்களில் எவ்வித சமரசமும் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

ஈரானின் அச்சுறுத்தல்களுக்குப் பணியப் போவதில்லை என்பதையும், தனது தளங்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதையும் பிரித்தானியா இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை