பல கோடி கொடுத்தாலும் சரி.. அந்த விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன்! – ஜி.வி. பிரகாஷின் அதிரடி முடிவு
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும், சிறந்த நடிகராகவும் வலம் வரும் ஜி.வி. பிரகாஷ், சினிமாவையும் தாண்டி சமூகப் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருப்பவர்.
தன்னிடம் உதவி என்று வருபவர்களுக்குத் தன்னால் முடிந்தவற்றைச் செய்து வரும் அவர், சமீபத்தில் கென் கருணாஸ் இயக்கி நடித்த ‘யூத்’ திரைப்படத்திற்குப் பணம் ஏதும் வாங்காமலேயே இசையமைத்துக் கொடுத்துத் தனது பெருந்தன்மையை நிரூபித்துள்ளார்.
இந்நிலையில், தனது சினிமா பயணம் குறித்துப் பேசிய ஜி.வி. பிரகாஷ், தான் ஒருபோதும் செய்யாத ஒரு விஷயம் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
“மக்களுக்குத் தீமை விளைவிக்கும் அல்லது உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு பொருளின் விளம்பரங்களிலும், எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் நடிக்கவே மாட்டேன்” என அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
பணத்தை விட மக்களின் நலனே முக்கியம் என அவர் எடுத்துள்ள இந்த முடிவு, சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகின்றது.





