Welcome to Jettamil

வாக்களிக்க மறந்தவர்களும் எதிர்காலத்தில் நம்மை நேசிப்பார்கள் – TVK விஜய் x தளத்தில் பதிவு

Share

வாக்களிக்க மறந்தவர்களும் எதிர்காலத்தில் நம்மை நேசிப்பார்கள் – TVK விஜய் x தளத்தில் பதிவு

“கட்சி ஆரம்பித்தது முதல் நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களே அதிகம்” எனக் குறிப்பிட்டுள்ள விஜய், எவரையும் சாராமல் மக்களை மட்டுமே நம்பி நின்ற தமக்கு, தமிழக மக்கள் தாயன்போடு வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்த ‘அதிசயத் தேர்தலின்’ ஆழமான காரணியாகத் தனது அன்பு ‘குழந்தைச் செல்வங்கள்’ விளங்குவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அச்சுறுத்தலாக இருந்த பணநாயகத்தை மக்கள் ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ள விஜய், மாற்றத்திற்கான முதன்மை சக்தியாகத் தனது இயக்கம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

“வாக்களிக்க மறந்தவர்களும் எதிர்காலத்தில் நம்மை நேசிப்பார்கள்” எனத் தன்னம்பிக்கையுடன் கூறியுள்ள அவர், கட்சி நிர்வாகிகள் மற்றும் ‘Virtual Warriors’களுக்கும் தனது வாழ்நாள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை