Welcome to Jettamil

மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்! நாசாவின் ‘ஆர்ட்டெமிஸ் II’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

Share

மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்! நாசாவின் ‘ஆர்ட்டெமிஸ் II’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA), சுமார் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ‘ஆர்ட்டெமிஸ் II’ (Artemis II) விண்கலத்தைப் புதன்கிழமை அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, உலகின் மிக சக்திவாய்ந்த எஸ்.எல்.எஸ் (SLS) ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் நிலவை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கியது.

இந்தப் பயணத்தில் அமெரிக்காவின் ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர், கிறிஸ்டினா கோக் மற்றும் கனடாவின் ஜெர்மி ஹேன்சன் ஆகிய நான்கு வீரர்களும் நிலவைச் சுற்றி வர உள்ளனர்.

சுமார் 10 நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணமானது, மனித வரலாற்றிலேயே விண்வெளியில் மிக நீண்ட தூரம், அதாவது சுமார் 4 இலட்சத்து 6 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு செல்லும் பயணமாக அமையவுள்ளது.

“நாங்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்காகச் செல்கிறோம்” என விண்கலம் ஏவப்படுவதற்கு முன்பு கனடா வீரர் ஹேன்சன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நிலவில் நிரந்தரமான மனிதக் குடியிருப்புகளை உருவாக்குவதற்கும், வருங்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கும் இந்தத் திட்டம் ஒரு முக்கியப் படிக்கல்லாகக் கருதப்படுகிறது.

2028-ஆம் ஆண்டு நிலவின் தென்துருவத்தில் மனிதர்களைத் தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ள நிலையில், விண்வெளிப் போட்டியில் அமெரிக்காவிற்கு இந்த வெற்றி ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. பூமியின் சுற்றுப்பாதையைத் தாண்டி நிலவைச் சுற்றி வரவுள்ள முதல் மனிதக் குழு இது என்பதால் உலகமே இதனை உற்றுநோக்கி வருகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை