Welcome to Jettamil

இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்! – சுனாமி எச்சரிக்கை

Share

இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்! – சுனாமி எச்சரிக்கை

கிழக்கு இந்தோனேசியாவின் தெர்னேட் (Ternate) நகரக் கடற்கரைக்கு அப்பால் உள்ள வடக்கு மொலுக்கா கடல் பகுதியில், இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இதனை முதலில் 7.8 ரிக்டர் எனப் பதிவு செய்திருந்த போதிலும், பின்னர் 7.4 ஆக உறுதிப்படுத்தியுள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி தெர்னேட் நகரிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நிலையில், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அருகிலுள்ள தீவுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை