நான் குற்றமற்றவன்! – நீதிமன்றக் கூண்டிலிருந்து யோஷித ராஜபக்ச முழக்கம்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு இன்று (14.05.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் சுமத்தப்பட்டுள்ள “சதித் திட்டம்” என்ற குற்றச்சாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனப் பிரதிவாதி தரப்பு முன்வைத்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நீதவான் உதேஷ் ரணதுங்க நிராகரித்தார்.
இந்த ஆட்சேபனைக்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்த நீதவான், குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பகிரங்க நீதிமன்றத்தில் யோஷிதவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசித்துக் காட்டப்பட்டது.
அப்போது நீதிமன்றக் கூண்டிலிருந்து பதிலளித்த யோஷித ராஜபக்ச, தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும், “தாம் குற்றமற்றவர்” என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைகள் வரும் நாட்களில் மேல் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.




