பால் மற்றும் பாலுணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு!
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த வாரம் முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதேபோல் இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால் மா பொதியின் விலையும் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பாலுணவுப் பொருட்களான, யோகட் மற்றும் பால் பக்கற்றுகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.
அதன்படி, யோகட் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரித்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும், பால் பக்கற்று ஒன்றின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 200 ரூபாவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் பெறுமதிசேர் வரி அதிகரிக்கப்பட்டதாலேயே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.