Welcome to Jettamil

செப்ரெம்பர் மாத பணவீக்கம் 70 வீதத்தை நெருங்கியது

Share

கொழும்பு கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில்,  செப்டம்பர் மாத பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் 64.3 சதவீதமாக இருந்த பணவீக்கம்,  செப்ரெம்பர் மாதம், 69.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக, அரசாங்க புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உணவு மற்றும் உணவு அல்லாத இரண்டு வகைகளிலும், செப்ரெம்பர் மாத பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஓகஸ்ட் மாதத்தில் 93.7 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் செப்ரெம்பர் மாதத்தில் 94.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, உணவு அல்லாத பணவீக்கம் 50.2 சதவீதத்தில் இருந்து 57.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

உணவு வகைக்குள், பழங்கள், கோழி இறைச்சி மற்றும் கோதுமை மாவின் விலைகளில் அதிகரித்துள்ள அதேவேளை,  அரிசி, பருப்பு, சீனி ஆகியவற்றின் விலைகள் இந்த மாதத்தில் குறைந்துள்ளன. உணவு அல்லாத வகைக்குள், வீட்டு வாடகை,  தண்ணீர், மின்சாரம், எரிவாயு மற்றும் பிற எரிபொருள் கட்டணங்கள்,  உணவகம் மற்றும் விடுதிகள், சுகாதாரம், கல்வி, தகவல் தொடர்பு கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை