எரிபொருள் விலை 70 ரூபா குறைக்க முடியும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் பாலித தெரிவித்துள்ளார்.
மசகு எண்ணையின் விலை உலக சந்தையில் 27 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே நாட்டிற்கு கொண்டுவரப்படும் அனைத்து எரிபொருளின் விலைகளும் 70 ரூபாவால் குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.