Welcome to Jettamil

ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்

Share

ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் ஊடகங்களிடம் பேசுகையில், “அமெரிக்கா தனது இறுதியான மற்றும் மிகச்சிறந்த சலுகையை (Best and Final Offer) முன்வைத்துவிட்டது; இதில் இனி மாற்றங்கள் ஏதுமில்லை” என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, மருத்துவத் தேவைகளுக்காகக் கூட ஈரான் அணுசக்தித் திட்டங்களைக் கொண்டிருக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

ஈரான் முன்வைத்த 10 அம்சத் திட்டத்தில் அணுசக்தித் திட்டத்தைக் கைவிடுவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. “அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் போவதில்லை என உச்ச தலைவர் அறிவித்த பின்னரும், அமெரிக்கா தனது நிபந்தனைகளைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கிறது” என ஈரானியத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை