போர்நிறுத்தத்திற்குச் சில மணிநேரம் முன்னதாகக் கொ**டூரம்! ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல்
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே இன்று இரவு 10 நாள் தற்காலிகப் போர்நிறுத்தம் அமுலுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் அமுலாவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக, பிண்ட் ஜெபெய்ல் (Bint Jbeil) மாவட்டத்திலுள்ள டெப்னைன் (Tebnine) நகரில் சுகாதாரத் துறைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்றின் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்தத் தாக்குதலில் ஆம்புலன்ஸில் இருந்த இரண்டு மருத்துவப் பணியாளர்கள் மிக மோசமாகக் காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள லெபனான் சுகாதார அமைச்சு, மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் கீழ் மருத்துவக் குழுக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும், இஸ்ரேல் அதனைத் தொடர்ந்து மீறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு போர்நிறுத்தம் தொடங்கவுள்ள நிலையில், இறுதி நேரத்திலும் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.





