Welcome to Jettamil

‘கயல்’ சீரியல் நடிகை சுபாஷினி சென்னையில் சடலமாக மீட்பு – ஈழத்துத் தமிழ்ப் பெண்ணின் மரணத்தில் மர்மம்?

Share

‘கயல்’ சீரியல் நடிகை சுபாஷினி சென்னையில் சடலமாக மீட்பு – ஈழத்துத் தமிழ்ப் பெண்ணின் மரணத்தில் மர்மம்?

முன்னணித் தொடரான ‘கயல்’ மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த நடிகை சுபாஷினி, இன்று (ஏப்ரல் 6) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள குடியிருப்பில் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, தகவலறிந்த பொலிஸார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இந்த விபரீத முடிவுக்கான காரணம் குறித்துத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட சுபாஷினி, திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற பெரும் கனவோடு சென்னைக்குச் சென்றார்.

ஆரம்பகாலப் போராட்டங்களைக் கடந்து ‘கயல்’ மெகா ஹிட் தொடரில் தனது யதார்த்தமான நடிப்பால் குறுகிய காலத்திலேயே இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களின் மனதைக் கவர்ந்தார்.

அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு திறமையான கலைஞரின் வாழ்வு இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வந்தது சக கலைஞர்களைத் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுபாஷினியின் மறைவுச் செய்தி வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“போராட்டங்களைக் கடந்து வந்த ஒரு பெண் இவ்வளவு பலவீனமான முடிவை எடுத்திருக்க முடியாது” என ரசிகர்கள் பதிவிட்டு வரும் வேளையில், பொலிஸார் அவரது தொலைபேசி அழைப்புகள் மற்றும் கடிதங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை