சுகாதார தொழிற்சங்கங்கள், நிதி அமைச்சுடன் இன்று முக்கிய கலந்துரையாடல்
அண்மையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சுக்கும் இடையில் இன்று (06) கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
பிற்பகல் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்காவிடின் நாளை முதல் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கு வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கடந்த 01 ஆம் திகதி அவசர வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் தடைப்பட்டு நோயாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
எவ்வாறாயினும், தமது கோரிக்கைகளுக்காக நிதியமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, எதிர்வரும் 3ஆம் திகதி காலை 6.30 மணியுடன் வேலைநிறுத்தம் முடிவடைவதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி இன்று பிற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.