மத்திய கிழக்கை அதிரவைக்கும் ‘கைபர் ஷேகன்’ ஏவுகணைகள்! 77ஆவது கட்டப் பாரிய தாக்குதலைத் தொடங்கியது ஈரான்
இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து, ஈரான் தனது 77ஆவது கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, இஸ்ரேலின் வடக்கு, மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளை இலக்கு வைத்து அதிநவீன ‘கைபர் ஷேகன்’ (Khyber Shekan) ஏவுகணைகள் மற்றும் தற்கொலை ட்ரோன்கள் மூலம் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலைத் தவிர, குவைத்தின் அலி அல் சலேம், சவுதி அரேபியாவின் அல் கர்ஜ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தஃப்ரா ஆகிய இடங்களிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் தாக்கியுள்ளதாக ஈரான் உரிமை கோரியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முரண்பாடான பேச்சுக்கள் மற்றும் 5 நாள் அவகாச அறிவிப்புகள் எங்களைத் தடுத்து நிறுத்தாது எனவும், இந்தப் போரைத் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுப்போம் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானின் இந்தத் திடீர் ஏவுகணை மழையால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் பெரும் நிலைகுலைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த ஏவுகணைகளை இடைமறிக்க முயன்று வரும் வேளையில், இந்த 77ஆவது கட்டத் தாக்குதலால் பாரிய உயிர்ச் சேதங்கள் மற்றும் கட்டமைப்புச் சேதங்கள் ஏற்படக்கூடும் எனப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.





